Breaking News

யாழ். குடாநாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த சிறப்புக் கொமாண்டோக்கள் களத்தில்!

யாழ்.குடாநாட்டின் கடலோரப் பிரா ந்தியத்தின் பாதுகாப்புக்கு நிறு வப்பட்ட கடலோரக் காவற்படையின ருக்கு உதவியாக சிறிலங்கா கடற்ப டையின் சிறப்பு படகுப் படையணி கொமாண்டோக்கள் களமிறக்கப்பட்டு ள்ளனர். 

இதற்கமைய, கடந்த 7ஆம் நாள் பருத்தித்துறைக்கும் மணல்காட்டு க்கும் இடைப்பட்ட பகுதியில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர், கடற்படை கொமாண்டோக்க ளின் உதவியுடன் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டு ள்ளனர். 

கடந்த ஜூலை மாதம் 21ஆம் நாள் மணற்காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தியவர்களை தடுக்க முற்பட்ட கடலோரக் காவற்படையினரை மணல் கடத்தியவர்கள் தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார். 

இதனையடுத்து, குறித்த பிரதேசத்திற்குச் சென்று ஆய்வுசெய்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன கடலோரக் காவற்படை யினருக்கு உதவியாக சிறப்புக் கொமாண்டோக்களை களத்திலிறக்க  அனு மதித்துள்ளார்.