சம்பந்தனின் கடிதத்திற்கு ஜனாதிபதியின் செயலாளர் பதில்!
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை தமது சொந்த நிலங்களில் மீள்குடி யமர்த்தி, நல்லிணக்கச் செயற்பாடுக ளுக்கு முக்கியத்துவம் வழங்கியே ஜனாதிபதி செயற்பட்டு வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
”இந்தவிடயம் தொடர்பாக நான் பாதுகாப்புச் செயலாளருடனும், இராணுவத் தலைமைக்கட்டளை அதிகாரியுடனும் பொதுவாகக் கலந்துரையாடியுள்ளேன்.
தங்கள் கோரிக்கை தொடர்பாக அவர்க ளும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
எனி னும் தங்கள் கடிதத்தில் குறிப்பிடப்ப ட்டுள்ளது போல் காலவரையறையைப் பொறுத்தமட்டில் சில மட்டுப்படுத்த ல்களை அவர்கள் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.
அதன்படி, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தமது சொந்தநிலங்களுக்குத் திரும்பி வரவேண்டிய தேவையையும், நல்லிணக்கச் செயற்பாடுகளின் முக்கியத்து வத்தையும் கருத்தில் கொண்டு காலவரையறை தொடர்பில் விட்டுக்கொடுத்து ஒத்து ழைக்கும்படி நான் அவர்களைக் கோரியுள்ளேன்.
அதற்கமைவாக, முடிந்தவரை விரைவாக இக்காணிகளை முறைப்படி விடுவிக்கும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அவர்களது ஒப்புதல்களை வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளருக்கும், இராணுவத் தலைமைக் கட்டளைஅதிகாரிக்கும் தங்கள் கோரிக்கையை முன்னளிக்கின்றேன்.
மேலும், தங்களது கோரிக்கை தொடர்பாக நான் அதிமேதகு ஜனாதிபதிக்கும் வாய்மொழி மூலம் தெரியப்படுத்தியுள்ளதோடு, அவரும் இடம்பெயர்ந்தோர் விடயத்தில் உதவுவதற்குத் தானும் அக்கறையோடு செயற்படுவதாகத் தெரியப்படுத்தினார்.
எதிர்காலத்தில் இதுவிடயமாக நாங்கள் மேற்கொள்ள வுள்ள இணக்கச் செயல்முறைகள் பற்றிநான் தங்களுக்கு அறியத்தரும் வரை என்னுடன் பொறுமையுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.