தண்டவாளத்தில் தலைவைத்து போராடப்போகும் மாகாணசபை உறுப்பினர்
வடமாகாணத்திலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் தொடர்பான பிரச்சனைக்கு அரசாங்கம் நடவடி க்கை எடுக்காவிட்டால் தண்டவா ளத்தில் தலைவைத்துப் படுத்துமறி யல் போராட்டத்திற்கு தயார் என தமி ழரசுக் கட்சியின் மாகாணசபை உறு ப்பினர் சுகிர்தன் கோரிக்கை விடுத்து ள்ளார். வடமாகாணசபையின் 103 ஆவது அமர்விலேயே கோரிக்கை கோரப்பட்டது. மேலும், வடமாகாணத்திலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளினால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை யில் ஈடுபட வேண்டுமென வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் பிரேரணை யொன்றை முன்வைத்தார்.
இப்பிரேரணை குறித்த விவாதத்தின்போதே வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தின் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளால் தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதனைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி தண்டவாளத்தில் தலை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கோரிக்கை விடுத்துள்ளார்