கேப்பாப்புலவு மக்களுக்கு சந்திரிக்கா வாக்குறுதி !
முல்லைத்தீவு மாவட்டத்தில்
கேப்பாப்புலவு கிராமத்தில் இராணு வத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள காணிகள் அனைத்தையும் விரைவாக பெற்றுத்தருவதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேப்பா ப்புலவு மக்களுக்கு உறுதியளித்து ள்ளார். கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கும் முன்னாள் ஆட்சியாளர் சந்திரிக்காவுக்குமிடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் நீண்ட நாட்களாகப் போராடும் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரு வதாக வாக்குறுதியளித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க இப் பிரச்சினை குறித்து தொலைபேசி வாயிலாக இராணுவத் தளபதியுடனும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பில், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதி தவிசாளர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரின் செயலாளர் சுரேந்திரன் ஆகியோர் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.