Breaking News

அவுஸ்திரேலிய தேர்தலில் வேட்பாளராக தமிழ்மண் இளைஞன் களமிறங்கத் தயார் !

அவுஸ்திரேலியாவின் பசுமைக்கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணம் சாவகச்சேரி யைச் சேர்ந்த சுஜன் செல்வன் எனும் 31 வயது தமிழ் இளைஞன் தயாராகியுள்ளார். இவர் 2000 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா சென்று இதற்கமைய 2005 ஆம் ஆண்டு அவுஸ்தி ரேலியா குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தம் நடைபெற்ற 2009இல் விடு தலைப்போராட்டம் தொடர்பான விடயற்களுக்கு அவுஸ்திரேலிய மக்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதை அடிப்படையாக கொண்டு “வொய்ஸ் ஒப் தமிழ்” என்னும் அமைப்பினை உருவாக்கிச் செயற்பட்டு வருகின்றார். 
அவுஸ்திரேலியாவில் இவர் மனித உரிமை ஆர்வலராகவும், அவுஸ்திரேலியாவிற்கு தஞ்சம் கோரி செல்பவர்களின் நலன் சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு முன்னணி செயற்பாட்டாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். 
இவ்வாறாக பல்வேறு சமூக செயற்பாடுகளில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் இவர் பசுமைக்கட்சியின் வேட்பாளராக தமிழர்கள் அதிகம் வாழும் சிட்னி தெற்கு பிராந்தியத்தில் பிரோஸ்பெக்ட் (Prospect) தொகுதியில் போட்டியிட தயாராகியுள்ளார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பிராந்திய சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது.