பெண்களுக்கான ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடரை நடத்த இங்கிலாந்து ஆர்வம்.
எதிர்வரும் 2021ஆம் ஆண்டு பெண்க ளுக்கான ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடரை நடத்த இங்கிலாந்து கால்பந்து சங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து கால்பந்து சங்க தலைமை செயல் அதிகாரி கூறுகையில், ‘நடப்பு ஆண்டு இறுதியில் இதற்கான போட்டியில் இணைய உள்ளது.
நடப்பு ஆண்டு ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடரில், இங்கிலாந்து வீராங்கனைகளின் சிறப்பான ஆட்டம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.
இதன்மூலம் மிகப்பெரிய ஐரோப்பிய தொடரை நடத்தும் அளவுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதென கூறினார்.
கடந்த வாரம் நடைபெற்று முடிந்த ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடரில், இங்கிலாந்து அணி அரையிறுதி போட்டி வரை முன்னேறி நெதர்லாந்து அணியிடம் தோல்வி கண்டது. இப்போட்டியை இங்கிலாந்தில் தொலைக்காட்சி வாயிலாக 4 மில்லியன் இரசிகர்கள் பார்த்து இரசித்துள்ளனர்.