உண்ணாவிரதப் போராட்டத்தில் முருகன் இன்று முதல் மௌன விரதம்!
வேலூர் சிறைச்சாலையில் இன்று டன் 4-வது நாளாக உண்ணாவிர தத்தை மேற்கொண்டு வரும் ராஜீவ் கொலை கைதி முருகன் உடல்நிலை சோர்வடைந்து காணப்படுகின்றது. இன்று காலை முதல் மௌன விரத த்தையும் ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட பிரதமர் ராஜீவ் கொலை வழக்கின் கைதி முருகன் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் விடுதலை கிடைக்காத பட்சத்தினால் சிறையில் வாழ்க்கையை தொடர்ந்து அனுபவிக்க விருப்பமின்மையால் ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டும் என சிறைத் துறைக்கு கடிதம் அனுப்பியதன்படி கடந்த 18-ந் திகதி தனது ஜீவசமாதி நிலையை அடைவதற்காக உணவுகளை உட்கொள்ளாமல் விரதம் இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.
இன்று அவரது உடல்நிலை சோர்வடைந்துள்ளதினால். வைத்தியர்கள் அவரது உடல்நிலையை பரிசோதனை செய்தனர். மேலும் இன்று முதல்மௌன விரதம் அனுட்டிக்கப் போவதாக முருகன் நேற்றைய தினம் தெரிவித்து இன்று காலை மௌன விரதத்தையும் தொடங்கிவிட்டார்.
சிறைக்குள் சிறைவாசிகள் உணவு உண்ணாமல் இருப்பது சிறை விதிகளை மீறும் செயலாகும். அதன்படி சிறை விதியை முருகன் மீறியதால் அவருக்கு உறவினர்களைச் சந்திக்கும் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
முருகன் 15 நாட்களுக்கு ஒரு முறை தனது மனைவியை காவல் துறை காவ லுடன் பெண்கள் சிறைக்கு சென்று சந்தித்துப் பேசி வந்துள்ளார். சிறை விதி களை முருகன் மீறியதால் அவருக்கு உறவினர்கள், மனைவி நளினியை கூட சந்திக்கும் சலுகை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
முருகன் தனது உறவினர்கள் மற்றும் மனைவியை 3 மாதங்கள் சந்திக்க இயலாது.
தொடர்ந்து அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டால் பிற சலுகை களும் ஒவ்வொன்றாக ரத்து செய்யப்படும் என சிறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து சிறை வைத்தியர்கள் மற்றும் அவரது குழுவினர் அவ்வப்போது பரிசோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.