முதலமைச்சர் சொன்னாலும் நான் பதவி விலகமாட்டேன், எச்சரிக்கை விடுத்தார் டெனீஸ்வரன்!
முதலமைச்சர் சொன்னாலும் தான் அமைச்சுப் பதவியிலிருந்து வில கப்போவதில்லையெனவும், முதல மைச்சர் தனது அதிகாரத்தைப் பயன்ப டுத்தி தன்னைப் பதவி நீக்கம் செய்ய முடியுமெனவும்,
அவ்வாறு செய்தால் தான் அதனைச் சந்தோசமாக ஏற்றுக்கொள்வதுடன், சட்டத்தரணியான தான் அதன் பின் முதலமைச்சரை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டுமோ அவ்வாறு எதிர்கொள்வேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார் போக்குவரத்துத்துறை அமைச்சர் டெனீஸ்வரன்.
இன்று காலை மன்னாரிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், வடமாகாண அரசியலின் அசாதாரண சூழ்நிலைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முக்கியமாக முதலமைச்சர் விசாரணைக்குழுவின் அறிக்கையின்படி செயற்படாமையே. முதலமைச்சர் விரும்பினால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சர்களை மாற்ற முடியும்.
அவ்வாறு அவர் செய்வார் என நான் நினைக்கவில்லை.
இவ்வாறான நிலை யில் மற்றைய அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவியிலிருந்து விலகியுள்ள போதிலும், முதலமைச்சர் என்னை விலகுமாறு தெரிவிக்கவில்லை.
அவ்வாறு அவர் கேட்டாலும் நான் விலகிக்கொள்ளப்போவதில்லை. ஏனென்றால் நான் ஊழல் செய்யவில்லை. என்மீது ஊழல் குற்றச்சாட்டுச் சுமத்தியவர்கள் சாட்சி சொல்ல வரவில்லை.
ஆனால் தற்போது அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முதல மைச்சர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இன்றைய தினமே என்னை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்க முடியும்.
அதனை செய்தால் மிக சந்தோசம். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுகின்றேன். அதன் பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் ஒரு சட்டத்தரணியாக இருந்து நடவடிக்கைகளை மேற்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.