20 ஆவது அரசியலமைப்பு ஊவா மாகாண சபையில் தோல்வி
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் 7 மேலதிக வாக்குகளால் ஊவா மாகாண சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பின் போது, ஆதரவாக 5 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன.
8 உறுப்பினர்கள் வாக்கெடு ப்பில் பங்குபற்றவில்லை.
ஊவா மாகாண சபையில் 34 உறுப்பினர்கள் இருப்பதுடன், அவர்களில் 9 பேர் இன்றைய சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.