Breaking News

தமிழகத்தின் துணை முதல்வராகவும் நிதியமைச்சராகவும் ஓ. பன்னீர்செல்வம்

ஓ. பன்னீர்செல்வம் தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பி ரமாணம் வழங்கி வைத்தார். இன்று நடைபெற்ற ஆளுநர் மாளிகையில் தமிழக விழாவில் துணை முதல்வ ராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்று ள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வேளை அமைச்சராக மாஃபா பாண்டியராஜனும் பதவியேற்றுக்கொ ண்டார். முக்கிய அமைச்சர்களும், அதிமுக-வின் முக்கிய நிர்வாகிகளும் இவ் விழாவில் பங்கேற்றிருந்தனர். 

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் வகித்து வந்த நிதித்துறையும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வகித்து வந்த வீட்டு வசதித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற மேம்பாடு, சிஎம்டிஏ துறைகளும் பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.