தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணி தலைவர் விலகுவதாக அறிவிப்பு !
தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணித் தலைவர் விலகிக்கொள்வதாக ஏபி டி விலியர்ஸ் அறிவித்துள்ளார்.
ஏபி டி விலியர்ஸ் 2012 ஆம் ஆண்டிலிருந்து தென் ஆபிரிக்க சர்வதேச ஒருநாள் மற்றும் சர்வதேச இருபதுக்கு 20 அணித்தலைவர் பொறுப்பெடுத்து ள்ளார்கள்.
டெஸ்ட் அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்ட அவருக்கு தோற்பட்டையில் உபாதை ஏற்பட்டதால் முக்கிய பல தொடர்களை இழந்தார்.
இதனால் தற்காலிக அணித்தலைவராக பெப் டு பிலெசிஸ் நியமிக்கப்பட்டதுடன், அவர் அணியை சிறப்பாக வழிநடத்தி பல வெற்றிகளை நிலைநாட்டியவர். சர்வதேச ஒருநாள் அணித்தலைவர் பொறு ப்பிலிருந்து தாம் விலகிக்கொள்வதாக ஏபி டி விலியர்ஸ் தெரிவித்துள்ளார்.
புதிய தலைவருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் விலியர்ஸ் தெரிவித்துள்ளார். அவர் தலைமையில் 103 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தென் ஆபிரிக்கா விளையாடியுள்ளதுடன், 59 வெற்றிகளையும், 39 தோல்விகளையும் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.