கிளிநொச்சி இலங்கை வங்கியில் இராணுவத்தினர் இரத்ததானம்
இலங்கை வங்கியின் 78 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிளி நொச்சி இலங்கை வங்கிக்கிளையில் இரத்ததான நிகழ்வும், பயன்தரு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வும் இன்று (செவ்வாய்க்கிழமை) நடை பெற்றுள்ளது.
இலங்கை வங்கியின் 78 ஆவது ஆண்டு நிறைவு முன்னிட்டு நாடாளாவிய ரிதியில் உள்ள கிளைகளில் பல்வேறு நிகழ்வுகள் நடை பெற்றுள்ளன.
இதில் சமுக நல வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, முல்லைத்தீவு வைத்தியசாலைகளுக்கான
இரத்த வங்கிகளின் இரத்தத் தேவைகளை நிறைவு செய்வதாக கூறி இரத்தம் வழங்கும் நிகழ்வில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை 9.00 மணிக்கு நடைபெற்றுள்ளது.
வடக்கிலுள்ள தமிழர்களின் உடலில் சுத்தமான தமிழ் இரத்தமா ஒடுகிறது அவர்களின் உடலில் சிங்கள இரத்தமே ஓடுகிறது. வடக்கில் இரத்த வங்கிகளில் இராணுவத்தினரே அதிகமாக இரத்தம் வழங்கிவருவதாக வடமாகாண ஆளுனர் தெரிவித்து வருகின்ற நிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.