கல்வீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்து!
கல்வீட்டுத் திட்டத்திற்கு விண்ண ப்பிக்கும்படி தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமைச்சினூடாக வடகிழக்கில் 50 ஆயிரம் கல்வீடு களை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதினால்கல்வீடுகளை கோரி விண்ணப்பிக்கும்படி மக்களை கோரியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததும் அப்போதை ஆட்சியாளராக இருந்த மகிந்த ராஜபக்ஷவிடம், வடகிழக்கு மக்களின் வீட்டுத் தேவையை நிறைவு செய்யுமாறு கோரியிருந்தோம். அதற்கு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கையை விரித்தது.
ஆனால், நாம் இந்தியாவுக்குச் சென்று வீடு கட்டித் தருமாறு கோரியபோது இந்திய அரசாங்கம் 44ஆயிரம் கல்வீடுகளை அமைத்துத் தந்த பின்னரும் வடக்கு – கிழக்கில் இன்னமும் வீட்டுத் தேவை இருக்கின்றது.
மீள்குடியேற்ற அமைச்சு 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைத்துத் தருவதாகத் தெரிவித்த போது ஒரு பொருத்து வீட்டுக்கான செலவில் 3 கல் வீடுகள் அமைக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளோம்.
பொருத்து வீட்டுக்கான செலவு குறைக்கப்பட்டது. ஆனால் அந்தப் பெறுமதியில்கூட இரண்டு வீடுகள் கட்ட முடியும் என்பதைத் தெரிவித்து பொருத்து வீட்டை எதிர்த்து நின்றோம்.
ஊழல் தொடர்பான பொருத்து வீட்டை மக்கள் ஏற்காவிட்டால் வீடே கிடைக்காது என்ற கருத்து வெளியிடப்பட்டது. இவ்வாறானதொரு நிலையில்தான், வடக்கு – கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடு அமைக்கப்படவுள்ளதான அறிவிப்பு வெளிவந்துள்ளது.
எனவே மக்கள் பொருத்து வீட்டினைத் தவிர்த்து, கல்வீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு கோருகின்றோம் எனக் கேட்டுள்ளார்.