Breaking News

இதுவரை நால்வர் உயிரிழப்பு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் !

கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடு பட்டோரில் இதுவரை நால்வர் உயிரி ழந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள வர்கள் உயிர் துறப்பதற்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவு களை மீட்டுத்தருமாறு  ஆசிய தொழி ல்நுட்ப அறிவுகூட மாணவர்கள் மற்றும் சமஉரிமை இயக்கத்தின் உறுப்பினர்களுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்ப ட்டோரின் உறவினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்டும், கைதுசெய்யப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஒருபுறம் இருக்க, யுத்தத்தின் இறுதி நாட்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் உத்தரவுக்கு அமைய சரணடைந்த  இராணுவத்தி டம் உயிருடன் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் உட்பட ஏராளமானோர் வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர். 

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையில் 187 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவி னர்களை ஆசிய தொழில்நுட்ப அறிவுகூட மாணவர்கள் மற்றும் சம உரிமை இயக்கத்தின் உறுப்பினர்கள் நேற்றைய தினம் நேரில் சென்று சந்தித்துள்ளனர். 
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளின் கோரிக்கைகளை கேட்டறிந்துகொண்ட அவர்கள், போராட்டகாரர்கள் எதிர்நோக்கும் நெருக்க டிகள் குறித்தும் ஆராய்ந்துள்ளனர். 

இந்நிலையில் போராட்ட களமே வாழ்வாகிப் போயுள்ள நிலையில் நால்வர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவு களது சங்க இணைப்பாளர் லீலாவதி ஆனந்தநடராஜா, தொடர்ந்தும் இவ்வா றான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.