Breaking News

போர்க்களமாக இலங்கையை மாற்ற அரசு முனைகிறது – குணதாஸ அமரசேகர குற்றாச்சாட்டு!

நாட்டின் பொது வளங்களை சர்வ தேசத்துக்கு தாரை வார்த்துக் கொடு த்து உலகின் பலமிக்க நாடுகளின் போர்க்களமாக இலங்கையை மாற்று வதற்கே அரசு முனைகின்றது. இவ்வாறு தேசிய அமைப்புகளின் சம்மேளன தலைவரும் மஹிந்தவின் விசுவாசியுமான குணதாஸ அமர சேகர கோரியுள்ளார். 

கொழும்பில்ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்தார். தெரிவித்தாவது, நல்லாட்சி என்று பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு விதைத்த தற்போதைய அரசு நாட்டின் பொது வளங்களையும், அரச சொத்துகளையும் சர்வதேசத்தின் பலமிக்க நாடுகளுக்குத் தாரைவார்த்து கொண்டிருக்கின்றது. 

முன்னாள் அரசின் காலத்தில் அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம் எமது நாட்டின் மிகச் சிறந்த சொத்தாகும். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனை செய்துள்ள தற்போதைய அரசு மத்தலை விமான நிலையத்தை இந்தியாவுக்கு கூறுபோட நடவடிக்கை எடுத்து வருகின்றது. அமெரிக்காவும் இலங்கை மீது கழுகுப் பார்வை செலுத்திவரும் சூழலில் அரசு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி சர்வதேசத்தில் பலமிக்க நாடுகளுக்கு இலங்கையின் சொத்துகளை விற்பனை செய்வதன்மூலம் எதிர்காலத்தில் இலங்கை அந்த நாடுகளின் போர்க்களமாக மாறும் என்றார்.