யானைகளின் தொல்லையிலிருந்து பாதுகாப்பு வேண்டும் : கிளிநொச்சி விவசாயிகள் கோரிக்கை
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள கல்மடுநகர், நாவல்நகர், றங்கன்குடியிருப்பு, ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானையின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாக தெரிவிக்கப்படு கின்றது.
இதனைத் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டு என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருடாந்தம் ஆயிரம் ஏக்கருக்கு மேல் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளும் கல்மடுக்குளத்தின் கீழ் தற்போதைய வறட்சி காரணமாக குளத்தின் நீரளவைக் கொண்டு 100 ஏக்கர் மாத்திரம் சிறுபோகச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்ற னர்.
இந்த நிலையில் சிறுபோகநெற் செய்கையை யானைகள் அழித்து வருவதால் தமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கி ன்றனர்.
குறிப்பாக இரவு வேளைகளில் யானைத் தாக்கத்திலிருந்து பயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் காவலுக்குச் சென்ற விவசாயிகளும் உயிராபத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் அண்மைய சம்பவமாக நேற்று முன்தினம் காவலுக்குச் சென்ற விவசாயி ஒருவரை யானை துரத்திய சம்பவம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.
எனவே யானைகளின் அட்டகாசத்திலிருந்து பாதுகாப்பு பெற குறித்த கிராமங்களுக்குப் பாதுகாப்பு வேலிகளை அமைத்துத் தருமாறு இந்த பகுதியில் வாழும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.