Breaking News

அசுரபல இந்தியா, எழுச்சிபெறும் எண்ணத்தில் இலங்கை, 2–வது டெஸ்ட் இன்று தொடக்கம்...

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கை யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட ரில் விளையாடி வருகிறது. காலே யில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியா சத்தில் அபார வெற்றி பெற்று தொட ரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மேலும், இந்த வெற்றியின் மூலம் பல சாதனைகளையும் இந்திய அணி புரிந்துள்ளது. இந்த நிலையில் இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி. ஸ்டேடியத்தில் இன்று துவங்குகிறது. 

முதல் டெஸ்டில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என இந்திய அணி முழு ஆதிக்கம் செலுத்தியது. ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலி, புஜாரா ஆகி யோர் சதம் விளாசினர். பந்து வீச்சா ளர்களும் தங்களது பணியை கச்சித மாக செய்து முடித்தனர். 

பலமான இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடனும் இலங்கை அணி தோல்வியிலிருந்து மீண்டு எழுச்சி பெரும் உத்வேகத்துடன் களமிறங்குகிறது. புஜாராவுக்கு இது 50–வது டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு முதல் டெஸ்டில் விலகிய, வழக்கமான இந்திய தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் குணமடைந்து விட்டார். 

இந்த டெஸ்டில் அவர் ஆடுவது உறுதி என்று கேப்டன் விராட் கோலி திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். அவரது வருகையால், காலே டெஸ்டில் 2–வது இன்னிங்சில் 81 ரன்கள் குவித்த தமிழகத்தை சேர்ந்த அபினவ் முகுந்தத் தனது அடுத்து வாய்ப்பிற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

ஆனால் மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் 190 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை பெற்றதன் மூலம் தன் இடத்தை உறுதி படுத்திக்கொண்டார். காலே டெஸ்டில் படுதோல்வி அடைந்த இலங்கை அணி தோல்வியில் இருந்து எழுச்சி பெற முயற்சிக்கும். நிமோனியா காய்ச்சலால் முதலாவது டெஸ்டில் ஆடாத இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சன்டிமால் இப்போட்டியில் களமிறங்குவது, அணிக்கு நமிக்கை தரக்கூடியதாக அமையும். அணியில் 3–வது சுழற்பந்து வீச்சாளராக புதுமுக வீரர் புஷ்பகுமாராவை சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் யோசித்து வருகி றதாக தகவல் வெளியாகியுள்ளது.