Breaking News

முன்னாள் போராளி மனம் திறந்தார் !

சமூக மயப்படுத்தப்பட்ட முன்னாள் பெண் போராளிகளுக்கு புலம் பெயர் சமூகம் உறவுகள் உதவி வழங்க முன் வர வேண்டுமென புனர்வாழ்வு அளி க்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளார்.

யுத்த கால த்தில் தாம் அனுபவித்த வேதனைகள் யாதையும் பொருட்படுத்தியதில்லை என தெரிவித்த அவர், புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து முன்னாள் பெண் போராளிகள் பல்வேறு துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான நேற்றைய ஊடகச் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.