Breaking News

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி முருகனின் உண்ணாவிரதம் குறித்து கருத்து கூற பொலீஸ் மறுப்பு.


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், ஜீவசமாதி அடையப்போவதாக் கூறி கடந்த மூன்று நாட்களாக வேலூர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் நிலையில்,முருகன் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க சிறைத்துறை அதிகாரிகள்  மறுப்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிறைத்துறையின் கூடுதல் இயக்குநர் இடம் கேட்ட போது, முருகன்  இறைவனை வேண்டி ஜீவசமாதி அடையப்போவதாகவும் கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. 
   
முருகன் தனது விருப்பப்படி மதநம்பிக்கையுடன் இருப்பதுபற்றி கேட்டபோது, ''தற்போது இதில் வேறு தகவல்களை கூறமுடியாது,'' என்று தெரிவித்தார் 26 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவரும் முருகன் தனது விருப்பத்தை மனுவாக எழுதி சிறைத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில், முருகன் அவரது மனைவி நளினி, சாந்தன் மற்றும் பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்டிருந்த தூக்குத்தண்டனையை 2014-இல் உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றியுள்ளது.

இதற்கு பின்னர் நால்வருக்கு விடுதலை அளிக்கக்கோரிப் பல போராட்டங்கள் தமிழகத்தில் நடந்தவேளை போராட்டங்களுக்கு எதிராக விமர்சனங்களும் தெரிவிக்கப்பட்டது. 

ஜீவசமாதி அடைய கோரி ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி உண்ணா விரதம்படத்தின் காப்புரிமை GETTY IMAGES தற்போது வேலூர் சிறையில் இருக்கும் முருகன், நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சமயங்களில் காவி உடையில், நீளமான தாடியுடன் தோன்றும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளார் முருகன். 

முருகனின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அண்மையில் இலங்கையில் வந்த முருகனின் தாயாரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதனால் அதை எதிர்த்து முருகன் வழக்கு நடத்திவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முருகனின் சட்ட ஆலோசகர் புகழேந்தி முருகன் ஜீவசமாதி அடைய விருப்பதாக முன்னதாகவே குறிப்பிட்டிருக்கின்றார் என்றும், கடந்த ஏழு ஆண்டுகளாக தீவிரமாக விஷ்ணு பக்தராக மாறியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்: 

ராஜீவ் காந்தி கொலை: பிரியங்காவுடன் சந்திப்பு பற்றி நளினி 'செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கின்றோம்': நளினி சிறையில் பிறந்த நளினி-முருகன் தம்பதியின் மகள் ஹரித்திரா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். 

மருத்துவராக வேலை செய்துவரும் ஹரித்திராவுக்கு திருமண ஏற்பாடுகள் மேற்கொள்வதற்காக நளினி ஆறுமாத காலம் விடுமுறை கோரி   ஒரு வார காலத்தை அடுத்து முருகன் ஜீவாசமாதி அடைய விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஜீவசமாதி அடைய கோரி ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி உண்ணா விரதம் ''26 ஆண்டுகளுக்கு மேலாக முருகன் மற்றும் நளினி இருவரும் சிறையில் உள்ளனர். 

இருவரும் தங்களது மகளை கடந்த 2004ல் நேரில் சந்தித்த கடைசிமுறை. தற்போது தங்களது மகளின் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்துவருகின்றனர். அதற்குக் குறைந்தபட்சம் ஆறு மாத காலம் பரோலில் விடுவிக்குமாறு நளினி கேட்டுள்ளார். 

இதற்கிடையில், முருகன் தனக்கு விடுதலை இல்லாத இந்தச் சிறை வாழ்க்கையின் துன்பத்தைப் போக்க ஜீவசமாதி அடையவேண்டுமென மனுத் தாக்கல் செய்துள்ளார்.