இன்று வரலட்சுமி விரதம் ! வரலட்சுமி விரதம் இருப்பது எப்படி
செல்வ வளங்களை வாரி வழங்கும் மகாலட்சுமியை விரதமிருந்து அவள் அருளை பெறும் நன்னாளே வரலட்சுமி விரதம். நாம் கேட்கும் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து நமக்கு வேண்டிய வரத்தை அருள்வாள் வரலட்சுமி.
அத்தகைய லட்சுமிதேவியை எப்போதும் வழிபடுவதே சிறப்பு. ஆண்டு முழுவதும் பலவகையான லட்சுமி பூஜைகளை செய்து தங்கள் செல்வ வளத்தை பெருக்கிட செய்யும் பக்தர்கள் வரலட்சுமி விரதத்தை கூடுதல் சிறப்புடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.
பெண்கள் தங்கள் கணவன் ஆயுள் நீடிக்கவும், குடும்பத்தின் செல்வ செழிப்பு உயரவும், சுபிட்சம் பெருகவும் வேண்டி மகாலட்சுமியை தங்கள் வீட்டிற்கு அழைத்து வழிபாடு செய்வதே வரலட்சுமி விரதம்.
சகல சௌபாக்கியத்தையும் தரும் வரலட்சுமி பூஜை செய்ய ஏற்ற நாள் ஆவணி மாத பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை. ஏனெனில் அன்றுதான் மகாலட்சுமி அவதரித்த நன்னாளாகவும் கூறப்படுகிது. புராண கதைகளின்படி தேவர் உலகின் சித்ர நேமி என்ற கணதேதை, கரசந்திரிகா போன்ற பல பெண்கள் கடைபிடித்த வரலட்சுமி விரத்தை பூவுலகில் சுமங்க ளிகள் அனைவரும் மேற்கொண்டு மகாலட்சுமியின் அருளை பெறுவோம்.