ஆஸி, நியூஸி மற்றும் இலங்கை அணியுடன் மோதும் இந்தியா: இரசிகர்கள் உற்சாகம்
சொந்த மைதானத்தில், இந்தியக் கிரிக்கெட் அணி எதிர்வரும் மூன்று மாதத்தில் நீண்டதொரு தொடரில் விளையாட வுள்ளது.
இந்திய மண்ணில் வந்து அவுஸ்ரேலியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மொத்தமாக மூன்று டெஸ்ட் போட்டிகள், 11 ஒருநாள் போட்டி கள் மற்றும் 9 ரி-ருவென்ரி போட்டிகளில் விளையாடவுள்ளன. அவுஸ்ரேலியாவிற்கு எதிராக செப்டம்பர் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று ரி-ருவென்ரி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.
நியூசிலாந்து அணிக்கெதிராக ஒக்டோபர் 22ஆம் திகதி முதல் நவம்பர் 7ஆம் திகதி வரை மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும், மூன்று ரி-ருவென்ரி கிரிக்கெட் போட்டிகளிடிலும் விளையாடுகிறது.
இலங்கை அணிக்கெதிராக நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 24ஆம் திகதி வரை மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று ரி-ருவென்ரி கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறது.
இந்த மூன்று நாடுகளுடன் விளையாடிய பிறகு இந்திய அணி தென்னாபிரிக்கா செல்கிறது.