Breaking News

உறவுகளை சம்பந்தரின் காலில் விழவைத்தாரா சிறீதரன்?

காணாமல்போனோரின் உறவினர்கள் 143
நாட்கள் போராட்டம் செய்துகொண்டிருந்த நிலையிலும் பாராமுகமாக இருந்த சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இன்று கிளிநொச்சிக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

கிளிநொச்சி விஜயத்தின்போது காணமல்போனோரின் உறவினர்கள் போராட்டம் நடாத்திக்கொண்டிருந்த இடத்துக்கு சம்பந்தரை அழைத்துச் சென்ற தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரன் அங்கு நின்ற ஒருவரை ஏமாற்றிக் காலில் விழவைத்த சம்பவமானது மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


சம்பந்தர் வருவதற்கு முன்பே காணாமல் போனவரின் உறவினருடன் கதைத்த சிறிதரன் நீங்கள் சம்பந்தர் ஐயாவுடன் பணிவுடன் அன்பாக இரக்கம் வரக் கூடியவாறு கதைத்தால் அவர் நிச்சயமாக உங்கள் உறவுகளை மீட்க உதவுவார் என உறுதியளித்துள்ளார்.

அவரின் வார்த்தையை நம்பிய அந்த முதியவர் சம்பந்தரின் காலில் விழுந்து எப்படியாவது உதவி செய்யுங்கள் எனக் கேட்டுள்ளார்.

இதுபற்றி கவலையடைந்த இன்னொருவர் இப்படி ஏன் காலில விழுந்து உதவி செய்யக் கேட்கிறீர்கள் எனக் கோபமாக கேட்டபோது தான் அப்படி எதுவும் சொல்லவில்லை என சிறிதரன் தெரிவித்திருக்கிறார்.

முன்னரும் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி வந்தபோதும் இதேபோன்ற சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.