வடமராட்சியில் பொலிசார் துப்பாக்கி சூடு -இளைஞர் உயிரிழப்பு
வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் சாலையில் 6 ஆம் கட்டைப் பகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது.
அவர் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தார் என்றும், பொலிஸார் மறித்தபோதும் அவர் நிற்காத காரணத்தாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும் பொலிஸ் தரப்பால் கூறப்பட்டது.
இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மந்திகை மருத்துவமனைக்கு வந்த பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜூப் மீது ஆத்திரமடைந்த மக்கள் கற்களால் தாக்குதல் நடத்தியிருந்தனர் இதனால் மந்திகை ஆதார வைத்தியசாலைப்பகுதியில் பெருமளவான பொலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.