வடக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராக ஜெயசேகரம்தெரிவு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக யாழ் வணிகர் கழகத் தலைவர் ஆர்.ஜெயசேகரம் நிய மிக்கப்படவுள்ளார்.
மாகாண சபை யில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்களுக்கான சுழற்சி முறை தேசியப் பட்டியல் ஆசனம் இறுதியாக இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கட்சியின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஜெயசேகரத்துக்கு வழங்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாகவும் இதற்கான அறிவித்தலையும் கட்சியின் செயலாளர் தேர்தல் ஆணையாளருக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் சுழற்சி முறையிலான ஆசனம் கடந்த வருடம் தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோக்கு) வழங்கப்பட்டு மயூரன் நியமிக்கப்பட்டி ருந்தார். மயூரனின் ஒரு வருட பதவிக்காலம் முடிவடைவதால் அவரின் இடத்திற்கு ஜெயசேகரம் நியமிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.