அரசியல் சூழ்ச்சிகளால் விரைவில் தமிழகம் இரு மாநிலங்களாக பிரிப்பு?
எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற எண்ணிக்கொண்டிருக்கும் மத்திய அரசு தமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் யோசனையை தீவிரமாக ஆலோசித்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டின் பல மாநிலங்களில் நேரடியாக ஆட்சியை கைப்பற்ற முடியாத பாஜக, ஆளும் கட்சிகளை உடைத்து பின்வாசல் வழியாக அதிகாரத்தை அனுபவித்து வருவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழகத்தில் அதிமுக, திமுக என இரண்டு வலுவான வாக்கு வங்கி முன்னால் பாஜக எதுவும் செய்ய முடியாத நிலைதான் இருக்கிறது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பல பிரிவுகளாக சிதைந்து போய் பாஜகவின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் கருது நிலவுகிறது. அதேநேரத்தில் திமுக தலைவர் கருணாநிதியும் முதுமையால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தாலும் அக்கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பலமாகவே உள்ளதாகவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தமிழக மண்ணில் ஆட்சியைக் கைப்பற்ற டெல்லி தீவிரமான ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதில் ஒன்றாக காலாவதியாகிப் போன தமிழகத்தை இரு மாநிலங்களாகப் பிரிக்கும் கோரிக்கையை நடைமுறைப்படுத்தலாமா என ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அவ்வப்போது வடதமிழகத்தை பிரித்து தனி மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. அத்துடன் திருச்சியை தமிழகத்தின் தலைநகராக்க வேண்டும் என்பது எம்ஜிஆர் காலத்தில் இருந்தே பேசப்பட்டு வருகிற ஒன்றாகவும் இருந்து வருகிறது. தற்போது இந்த கோரிக்கையை நடைமுறைப்படுத்தி, வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து ஒரு மாநிலமாகவும் தென் மாவட்டங்களை இணைத்து ஒரு மாநிலமாகவும் உருவாகினால் ஆட்சி அதிகாரத்தில் அமர முடியுமா என டெல்லி ஆலோசித்து வருகிறது எனவும், இப்படி செய்வதன் மூலம் அதிமுகவின் கொங்கு கோஷ்டியும் மாநில பிரிவினையை வலியுறுத்தி வந்த பாமகவும் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என நம்புகிறது பாஜக எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆதரவால் எப்படியோ தமிழகத்தின் ஒரு பகுதியில் அரியாசனத்தில் அமர்ந்துவிடலாம் என்பது டெல்லியின் கணக்கு என்றவாறு தகவல் தெரிவிக்கின்றன.
யார் தேர்தலில் நின்றாலும், மக்கள் தான் ஓட்டு போட வேண்டும் எனவும், தமிழ் மக்கள் சிந்தனை எப்படி பட்டது என்று உலகமே அறியும் எனவும், இவ்வாறு ஏதாவது முயற்சி செய்து முகத்தில் கறியை பூசிக்கொள்ளமால் இருக்கலாம் என்றவாறு பலரின் கருத்து நிலவுகின்றது.