Breaking News

துப்பாக்கியை பறிகொடுத்த பொலீசிற்கு பதவி உயர்வு எதற்கு?(காணொளி)

தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார்? எனும்
தலைப்பில் வவுனியாவில அரசியல் கலந்தாய்வு கூட்டமொன்று நடைபெற்றது.

குறித்த அரசியல் கலந்தாய்வு கூட்டம் வவுனியா நகரசபை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் சிவகரன் பேசும்போது யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அவர் பேசும்போது நீதிபதி இளஞ்செளியன் வீதியில் இடம்பெற்ற சலசலப்பை பஞ்சாயத்து பார்க்கப்போய் அதில் காவலுக்கு சென்ற பொலீஸ் தனது துப்பாக்கியை பறிகொடுத்ததையும் அவ்வாறு துப்பாக்கியை எதிரியிடம் பறிகொடுப்பவருக்கு இராணுவ சட்டப்படி பதவி குறைப்பே இடம்பெறுவது என்றும் மாறாக இங்கே பதவி உயர்வு வழங்கப்பட்டதோடு அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் கேடு கெட்ட நிலைக்கு தமிழினம் வந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.


அத்தோடு இளஞ்செளியன் இலக்கு இல்லையென்றும் சொல்லப்படுகிறது, இளஞ்செளியன் முதல்வர் ஆகப்போகின்றார்கள் என்றும் சொல்லப்படுகிறது இவ்வாறான ஒரு அரசியல் சுஸஜஹ“்டஃ.இ” இவ்வாறு கடமையை சரியாக செய்யாத பொலீசிற்கு எப்படி பதவி உயர்வு வழங்கமுடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.



வவுனியா சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், ஆய்வாளர் சி.அ.ஜோதிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களுடன், மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இது தொடர்பான செய்திகள் விரைவில் பதிவேற்றப்படும்.