விளக்கமறியல் கைதி தப்பியோட்டம் – யாழ்.நீதிமன்றில் சம்பவம்
யாழ்.நீதவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்ட விளக்க மறியல் கைதி ஒருவர் சிறை காவலர்களின் காவலில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
யாழ்.நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் வியாழக்கிழமை திருட்டு குற்ற சாட்டு சுமத்தி சுண்டுக்குழி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதனை அடுத்து நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.
அதையடுத்து சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களால் குறித்த நபர் காவலில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென விளக்கமறியல் கைதி சிறை காவலர்களின் காவலில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
தப்பியோடிய விளக்க மறியல் கைதியை பிடிப்பதற்காக சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் மற்றும் நீதிமன்ற காவல் கடமையில் ஈடுபட்டு இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் முயன்ற போதிலும் அவர்களிடம் இருந்து விளக்கமறியல் கைதி தப்பியோடி யுள்ளார்.
தப்பியோடிய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களும், பொலிசாரும் முன்னெடுத்து வருகின்றார்கள்.