Breaking News

ஈழத்தமிழர்களின் நினைவிடத்தை நிஜமாக்கிய ஓவியர் வீரசந்தானத்திற்கு அஞ்சலி

தஞ்சை ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ என்னும்
ஈழத்தமிழர்களின் நினைவிடத்தை அமைப்பதில் பெரும் பங்காற்றிய மறைந்த, ஓவியர் வீரசந்தானத்திற்கு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உலகத் தமிழர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த தமிழ் பற்றாளரும் சிறந்த ஓவியருமான வீரசந்தானம் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டுவந்த நிலையில் சென்னை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பலனில்லாமல் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) உயிரிழந்தார்.



தமிழ்நாட்டுக்காகவும் தமிழீழத்துக்காகவும் சமரசமின்றி ஓயாது போராடிய இவர், ஆயுத விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதிலும் மிகவும் உறுதியாக இருந்துள்ளார். அதிதீவிரமான தமிழ்த்தேசிய உணர்வாளராக, துணிவாகக் களமிறங்கிச் செயலாற்றும் போராளியாக விளங்கிய ஓவியரான வீரசந்தானம், தமிழுக்காகவும் தமிழினத்துக்காகவும் உரத்துக் குரலெழுப்பியவர்.

இந்திய அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடி, தமிழ்நாட்டை தனிநாடாக வென்றெடுக்க வேண்டுமென்னும் கருத்தை ஓங்கி முழங்கியவர். தனது வாழ்வையே சுதந்திரத் தமிழ் ஈழ விடியலுக்காகவே அர்ப்பணித்த இவரது இழப்பு தமிழ்த்தேசியக் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்.