Breaking News

தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்?-சிறப்பு கலந்துரையாடல்

தடுமாறாத தமிழர்களிற்கு தலைமை ஏற்பது யார் ? என்ற தலைப்பில் மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 09.07.2017 அன்று யாழ் நகரில் அரசியல் கருத்துப்பகிர்வு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இது தொடர்பாக கருத்துப்பகிர்வு நிகழ்வு

காலம்:- 09/07/2017 ( ஞாயிற்றுக்கிழமை)

இடம்:- கலைத்தூது மண்டபம்,யாழ்ப்பாணம்.

நேரம்:- காலை 9. 15 மணிக்கு.

இனவிடுதலைக்கான அரசியல் பயணத்தில் தமிழ்மக்கள் பல்வேறு விதமான இழக்கமுடியாத இழப்புக்களுடன் வழிநெடுக வலிசுமந்த வாழ்வாகவே விதி நிர்ணயம் ஆகிவிட்ட வேளையில், 2009 க்குப்பின்னர் வலிமையற்ற தலைமையால் தமிழ்மக்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். என்பதே நிதர்சன உண்மை.

எமது விடுதலைக்கான பயணம் இன்னும் முடிவுறாமையினால் நாம் ஏனோ தானோ என அசட்டை கொள்ள முடியாது. எமக்கு எல்லோருக்கும் கூட்டுப்பொறுப்புண்டு. ஆகவே கருத்தியல்வாதிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள், இளையோர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து.

தடுமாறும் தலைமைகளின் நிலைப்பாடு தொடர்பிலும் எமது மக்களின் எதிர்கால இனவிடுதலையின் விசுவாசப்பயணம் தொடர்பிலும் தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டிய இக்கட்டான கால சூழ்நிலை. ஏதுவாக நிலவுவதால்,
ஆரோக்கியமான கருத்துப்பகிர்வுறவாடலுக்கு தமிழ்த்தேசிய தார்மீக உறவுரிமையுடன் அணிதிரண்டு வருமாறு அன்புவகையுடன் அழைக்கின்றோம்.