ரணில் – சந்திரிகா கூட்டணிக்குள் குழப்பம்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூடுதலான அதிகாரங்களை கோரி நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. இந்த உடன்படிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் பூர்த்தியாகவுள்ளது.
இந்தநிலையில் மீளவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் உடன்படிக்கை கைச்சாத்திடும் போது மேலதிக அதிகாரங்களை கோருவதற்கு சுதந்திரக் கட்சி உத்தேசித்துள்ளது என சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய ஒர் உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.
இந்த உடன்படிக்கை பெரும்பாலும் ஒக்ரோபர் மாதமளவில் கையொப்பமிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியினருக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.