கூட்டமைப்பை விமர்சிக்க வேண்டாம்! - செல்வம் கோரிக்கை
நாட்டின் இன்றைய நிலையில் கூட்டமைப்பின் ஐக்கியமே முக்கியம் இதனை விடுத்து உள்ளிருந்தவாரே எதேச்சையாக கூட்டமைப்பின் தலமையை விமர்சிப்பதனை கண்டிப்பதாக கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
நாட்டின் இன்றைய நிலையில் கூட்டமைப்பின் ஐக்கியமே முக்கியம் இதனை விடுத்து உள்ளிருந்தவாரே எதேச்சையாக கூட்டமைப்பின் தலமையை விமர்சிப்பதனை கண்டிக்கத்தக்கது.
தீர்வுகள் தொடர்பில் இன்று நாம் மட்டுமன்றி சர்வதேசமே கூர்ந்து கவனிக்கும் நிலையில் கூட்டமைப்பிற்குள் இருந்து கூட்டுப் பொறுப்பை கருத்தில் கொள்ளாமல் வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக ஓர் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தமை என்கின்ற முக்கிய நோக்கத்தின் அடிப்படையிலேயே எந்தவிதமான சமரசத்திற்கும் இடமின்றி உடனடியாக ஏனைய மூன்று கட்சிகளும் ஒன்றினைந்து பங்காற்றி சுமூகமான தீர்வினை எட்டினோம்.
அதே போன்றுதான் எவறாவது கூட்டுப் பொறுப்பினை மீறி தனித்துச் செயல்படவும் தனித்து கூட்டுக்கும் தலமைக்கு எதிராகவும் அறிக்கை விட முனையும்போது அவ்வாறு மீறுபவர்களை கண்டித்து எமது வழிக்கு கொண்டு வருவதற்காக நிச்சயமாக ஏனை மூன்று தரப்புடனேயே நாம் தொடர்ந்தும் தோல் கொடுப்போம் .
ஏனெனில் இவ்வாறு இடல்பெறவேண்டும் என்றே சிலர் எதிர்பார்க்கின்றனர். அவர்களால் எதனையும் சாதிக்க முடியாது. அதனால் கூட்டமைப்பும் சாதித்துவிடக் கூடாது என எண்ணுகின்றனர்.
இவ்வாறு சில உதிரிகள் எண்ணும் அற்ப விடயத்திற்கு உரமூட்டும் வகையில் எந்தவிதமான ஒரு செயல்பாட்டினையோ அல்லது கருத்தினையோ நாம் அனுமதிக்கப்போவதில்லை. எனவே இவ்வாறு இடம்பெறுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றார்.