Breaking News

சிறிலங்கா வெள்ள அபாயத்தை 49 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்த அமெரிக்க நிறுவனம்

மூன்று பிரதான ஆறுகளுக்கும் குறுக்கே, ஆறு பெரிய அணைகளை அமைக்கும் வரை, சிறிலங்கா பாரிய வெள்ள மற்றும் நிலச்சரிவு ஆபத்துக்களை எதிர்கொள்ளும் என்று அமெரிக்க பொறியியல் நிறுவனம் ஒன்று 49 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்துள்ளது.


சிறிலங்காவின் உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

களு கங்கை, ஜின் கங்கை, நில்வள கங்கை ஆகிய ஆறுகளுக்குக் குறுக்கே, பல்வேறு இடங்களில் ஆறு அணைக்கட்டுகளை அமைக்க வேண்டும் என்று அமெரிக்க நிறுவனம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு திட்டம் ஒன்றை முன்வைத்திருந்தது.

இந்த திட்டத்தை செயற்படுத்துவதன் மூலமே வெள்ள ஆபத்தில் இருந்து பாதுகாப்புத் தேட முடியும்.

கொலராடோவைச் சேர்ந்த ஈசிஐ பொறியியல் ஆலோசனை நிறுவனமே இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.