Breaking News

சூரியனில் ஆய்வு நடத்த நாசா முடிவு



அமெரிக்காவின் ‘நாசா’ மையம் சூரியனில் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது, அதற்காக ‘எஸ்பிபி’ (சோலார் புரோப்பிளஸ்) என்ற விண்கலத்தை உருவாக்கி வருகிறது.

அடுத்த ஆண்டு (2018) கோடை காலத்தில் இந்த விண்கலத்தை சூரியனுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இது சூரியனின் ‘கரோனா’ எனப்படும் மேல்பரப்பை ஆய்வு செய்யவுள்ளது, இது சூரியனின் உட்புற பரப்பை விட பல நூறு மடங்கு அதிக வெப்பமாகும், அதாவது 5 இலட்சம் டிகிரி செல்சியஸ் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சூரியனில் நடத்தப்படும் ஆய்வு குறித்த விளக்கங்களை ‘நாசா’ மையம் நேற்று ‘நாசா’ தொலைக்காட்சி மற்றும் தனது இணையதளத்திலும் ஒளிபரப்பிபயது.