பூகோள அமைதிச் சுட்டி- தரவரிசையில் சிறிலங்கா பெரும் பாய்ச்சல்
பூகோள அமைதிச் சுட்டி எனப்படும் உலகின் அமைதியான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில், சிறிலங்கா 17 இடங்கள் முன்நோக்கி நகர்ந்துள்ளது.
2017ஆம் ஆண்டுக்காக பூகோள அமைதிச் சுட்டி எனப்படும் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலகின் மிக அமைதியான நாடாக, ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது.
இதில் சிறிலங்கா 17 இடங்கள் முன்னேறி 80 ஆவது இடத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சமூக பாதுகாப்பு, பாதுகாப்பு விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் பிரதிபலிப்பாகவே, தரவரிசையில் இந்தப் பெரும்பாய்ச்சல் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தரவரிசையில், தெற்காசிய நாடுகளில், பூட்டான் 13ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா 137 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 152 ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 162 ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.