இன்று ஈழ ஆதரவாளர்களின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!
ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்காகவும், நீதிக்காகவும் போராடிவரும் திருமுருகன்காந்தி உள்ளிட்ட ஈழ ஆதரவு செயற்பாட்டாளர்கள் கடந்த மே மாதம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தமிழக மெரீனா கடற்கரையில் நிகழ்த்தியமைக்காக கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஈழத் தமிழ் மக்களுக்காக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் வாடும் தோழர்களின் விடுதலையை வலியுறுத்தி நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு அழைக்கின்றனர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்.
திகதி: 08-06-2017 வியாழக்கிழமை
நேரம்: மு.ப 10.00 மணி
இடம்: யாழ் பேருந்து நிலையம் முன்பாக.