சசிகலா தான் அ.தி.மு.க பொது செயலாளர்! – பாலாஜி
டி.டி.வி. தினகரன் இன்னும் கட்சி பணியாற்றி வருகிறார். இதேபோல் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலா தான், என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சிறையில் இருந்து விடுதலையான பின்பு அவரை அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசி வருகிறார்கள்.
இதுவரை 31 எம்.எல்.ஏ.க்கள் தினகரனை சந்தித்துள்ளனர். இது பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது:-
டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.வின் துணை பொதுச் செயலாராக இருக்கிறார். அவரை எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசி வருகிறார்கள். அவர்களும் அ.தி.மு.க.வினர்தான் எனவே சந்திப்பதில் தவறு இல்லை.
இதனால் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. இந்த அரசு நீடிக்கும் தேர்தல் வரும் என்ற பேச்சுக்கே இடமில்லை. பிரச்சனை வரும் போதெல்லாம் அதிமுக விஸ்வரூபம் எடுக்கும்.
டி.டி.வி. தினகரன் இன்னும் கட்சி பணியாற்றி வருகிறார். இது போல் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும் சசிகலா தான்.
இவ்வளவு பிரச்சனைகளுக்கு பிறகு அதிமுக ஒற்றுமையாக மாறியது என்ற நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.