காணாமல் போனோர் பணியகத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறது பிரித்தானியா
காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டம், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதை பிரித்தானியா வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ், தனது அதிகாரபூர்வ கீச்சகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில்,
‘சிறிலங்காவில் காணாமல் போனோருக்கான பணியக சட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இதனை உடனடியாக நடைமுறைப்படுத்துவது, எல்லா சமூகங்களையும் சேர்ந்த மக்கள் தீர்வு ஒன்றை கண்டறிவதற்கு உதவியாக அமையும்” என்று கூறியுள்ளார்.
அமெரிக்கத் தூதுவர் அதுல் செகாப்பும் அண்மையில், காணாமல் போனோருக்கான பணியகம் மிக அவசியமானது என்று கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.