விக்கினேஸ்வரனுக்கு இனி தொல்லை கொடுக்கமாட்டோம் -மாவை
வடமாகாண சபை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்
மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கிடையில் அவசர கலந்துரையாடலொன்று இடம்பெற்று உள்ளது.
குறித்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண கூவத்தூர் விடுதி என வர்ணிக்கப்படும் மாட்டின்வீதி தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று மாலை ஐந்து மணியளவில் நடைபெற்றுள்ளது.
அரசியல் ரீதியாக குழப்ப சூழ்நிலை நீடித்திருந்த நிலையில் வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கிடையில் இருந்த முறுகல் நிலையினை ஒரு சுமுகமாக தீர்க்கும் முகமாகவும் எதிர்காலத்தில் முதலமைச்சருக்கு இடஞ்சல் கொடுக்காமல் எவ்வாறு கடமையாற்றுவது என்பதுபற்றியும் ஆராயப்பட்டுள்ளதாக மாவை சேனாதிராயா தெரிவித்துள்ளார்.
அத்தோடு முதலமைச்சரோடு த.தே.கூட்டமைப்பு பங்காளிக்கட்சி தலைவர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கி எவ்வாறு பயணிப்பது என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்