Breaking News

தமிழீழத்திற்கான போராட்டம் தொடரும்..!!



நியாயமான தீர்வை எதிர்பார்த்து வாக்களித்த தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் கைங்கரியத்தில் நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற அமர்வொன்றில் இலங்கையிலிருந்து ஸ்கைப் தொழிநுட்பம் ஊடாக உரையாற்றிய சிறிதரன் இவ்வாறு குறிப்பிட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்தம் முடிவடைந்து எட்டு வருட காலம் நிறைவடைந்துள்ள நிலையிலும், தமிழ் மக்கள் தொடர்ந்தும் வீதிகளில் போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தமிழீழத்திற்கான போராட்டம் தொடருமெனவும் சிறிதரன் குறிப்பிட்டதாக குறித்த ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.