Breaking News

21ஆம் திகதி முழுநாள் விவாதம்

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதம், எதிர்வரும் 21ஆம் திகதி, முழுநாள் விவாதமாக நடத்துவதற்கு, கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  


காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை தாபித்தல், கால தாமதமாகுவது தொடர்பில், பல்வேறான தரப்புகளிலிருந்து, அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அந்த அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

திருத்தச் சட்டமூலதமானது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், அன்றையதினம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அடுத்தவார நாடாளுமன்ற அமர்வானது எதிர்வரும் 20ஆம் திகதியன்று ஆரம்பமாகி, எதிர்வரும் 23ஆம் திகதியன்று நிறைவடைய உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்