ஜெனிவா கூட்டத்தொடரில் திங்களன்று சிறிலங்கா குறித்த விவாதம்
ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், சிறிலங்கா குறித்த அறிக்கை ஒன்று தொடர்பாக வரும் திங்கட்கிழமை விவாதிக்கப்படவுள்ளது.
நீதிபதிகள், மற்றும் சட்டவாளர்களின் சுதந்திரம் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், சிறிலங்காவுக்கு மேற்கொண்டிருந்த பயணம் தொடர்பாக சமர்ப்பிக்கும் அறிக்கை குறித்தே விவாதிக்கப்படவுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், நீதிபதிகள், மற்றும் சட்டவாளர்களின் சுதந்திரம் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளராக இருந்த மோனிகா பின்ரோ கடந்த 2016 ஏப்ரல் 29ஆம் நாள் தொடக்கம், மே 7ஆம் நாள் வரை, சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டு ஆய்வுகளை செய்திருந்தார்.
இது தொடர்பான அறிக்கையை, நீதிபதிகள், மற்றும் சட்டவாளர்களின் சுதந்திரம் தொடர்பான தற்போதைய ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், டியேகோ கார்சியா சயன், பேரவையில் சமர்ப்பிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது