இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் சம்பந்தன் பேச்சு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்பு சுமார் 1 மணித்தியாலம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன், பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்தியதாக தெரிவித்தார்.
நல்லாட்சியை வலுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பரிமாறிக் கொண்டதாகவும், இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில், இரா.சம்பந்தனுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.