காணாமல்போனோருக்கான பணியகத்துக்கு விசாரணை நடத்தும், வழக்குத் தொடுக்கும் அதிகாரம் இல்லை
காணாமல்போனோருக்கான பணியகத்துக்கு குற்றவியல் விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரமோ, சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரமோ இருக்காது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம், காணாமல் போனோர் பயணத்தை உருவாக்கும் திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
காணாமல் போனோர் பற்றிய உண்மைகளைக் கண்டறிவது மற்றும் தேவைப்பட்டால், காணாமல் போனோருக்கான சான்றிதழ்களை வழங்குவது தான், இந்தப். பணியகத்தின் கடமையாக வரையறுக்கப்பட்டுள்ளது.
நாட்டை ஒற்றுமைப்படுத்துவதற்கு போரின் காயங்கள் குணப்படுத்தப்பட வேண்டும். கடந்த காலம் தொடர்பாக நீண்ட சட்ட நடைமுறைகளால் பாதிக்கப்பட்டவர்களை காயப்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை.
தேவைப்பட்டால், தென்னாபிரிக்காவில் அமைக்கப்பட்டது போன்ற உண்மை நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.