2020இல் புகையிலை உற்பத்திக்குத் தடை
சிறிலங்காவில் புகையிலை உற்பத்தி வரும் 2020 ஆண்டில் முற்றாகத் தடை செய்யப்படும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று ஐதேக உறுப்பினர் புத்திக பத்திரனவினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர்,
“சிறிலங்காவில் தற்போது 30 ஆயிரம் பேர் புகையிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.
புகையிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாற்றுப் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் தற்போது 2200 ஏக்கரில் புகையிலை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறிலங்கா அரசாங்க தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவு விவசாயிகள் புகையிலை செய்கையை நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.