Breaking News

வடமாகாண முதலமைச்சராகிறார் சி.வி.கே



விசாரணைக்குழு அறிக்கையின்படி வடமாகாண அமைச்சர்கள் நான்குபேருக்கெதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தநிலையில் இருவரை பதவி விலகுமாறும், மற்றைய இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறும் முதலமைச்சர் பணிப்புரை விடுத்திருந்தார்.

முதலமைச்சரின் இச்செயற்பாடானது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் நியாயத்தைக் கேக்காது தன்னிச்சையாக கட்டாய விடுப்புவழங்கியுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் இந்நடவடிக்கை அரசியல் மட்டத்தில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

முதலமைச்சரின் இந்நடவடிக்கையையடுத்து தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் வடமாகாண முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்காக ஆளுனரின் அனுமதி கோரி 20இற்கு மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதனடிப்படையில் வடமாகாண முதலமைச்சராக சி.வி.கே.சிவஞானம்முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது முதலமைச்சரை மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், ஏனைய அமைச்சுக்களில் மாற்றம் செய்வது தொடர்பாக இதுவரை முடிவெதுவும் எடுக்கப்படவில்லையெனத் தெரியவருகின்றது.