Breaking News

தமிழ் மக்களை திரும்பி பார்க்காத சம்பந்தன்



தமது அடையாளத்திற்காகவும், தமது இருப்பை தக்கவைப்பதற்காகவும் வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களை திரும்பி பார்க்காத எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், தனது பதவியையும் கட்சியையும் தக்கவைப்பதற்காக கடிதம் எழுதியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியிலுள்ள மக்களுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்குமான தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று நேற்று பாலிநகர் பகுதியில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.