Breaking News

வடமாகாண விவசாய அமைச்சராக பதவியேற்கின்றார் முதலமைச்சர்



வடமாகாண பதில் விவசாய அமைச்சராக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்த நிகழ்வு உள்ளூர் நேரப்படி இன்று இன்று பிற்பகல் 3 மணிக்கு வடக்கு மாகாண சபையில் இடம்பெறவுள்ளது.

ஏற்கனவே வடமாகாண அமைச்சர்களாக பதவி வகித்த விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவர் பதவி விலக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த பதவிக்கு வெற்றிடம் நிலவி வந்த நிலையில், முதலமைச்சர் குறித்த பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.