Breaking News

ஐங்கரநேசனுக்கு ஆதரவாக நல்லூரில் திரண்ட மக்கள்

வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 25.06.2017 பிற்பகல் 3:15 மணியளவில் குறித்த மக்கள் சந்திப்பு நடைபெற்றது.


இதன்போது முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் தனது தரப்பு நியாயங்களை ஆதரவாளர்களிடம் விளக்கமாக எடுத்துக்கூறியிருந்தார்.


இச் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ஒரு வருடத்திற்கு முன்னர் சில உறுப்பினர்கள் என்னை தொடர்புகொண்டு முதலமைச்சரை பதவியில் இருந்து தூக்கியெறியவேண்டும். அதற்கு முன்னர் முதல்வருக்கு ஆதரவாக செயற்படும் ஐங்கரநேசனின் அமைச்சு பதவிகள் பறிக்கப்படவேண்டும் அதற்கான பிரேரணை ஒன்றை மாகாண சபையில் கொண்டு வரவேண்டும் என எனக்கு அழைப்பு விடுத்தனர்.இதற்கு கைமாறாக பிரதி அவைத்தலைவர் பதவி வழங்குவதாக கூறினர்.









இவ் விசாரணை அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த விந்தன் கனகரத்தினம் ஐங்கரநேசன் மீது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுக்களும் இல்லை திட்டமிட்டு கணக்காய்வு விசாரணைகள் எதுவும் விசாரிக்காமல் ஆரம்பத்தில் ஒன்றைக் குறிப்பிட்டுவிட்டு பின்னர் தீர்ப்பில் வேறொன்றை குறிப்பிட்டிருக்கின்றனர்.

இவற்றுக்கு எல்லாம் அஞ்சாமல் மீண்டும் அரசியலில் ஐங்கரநேசன் ஈடுபடவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.  இக் கூட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசனின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டது யாழ் அரசியல் பரப்பில் வியப்புடன் நோக்கப்பட்டதாக தெரியவருகின்றது.