பங்காளிகள் கட்சி சந்திப்பின் பின் சம்பந்தனுக்கு விக்கி பதில் அனுப்பினார்
தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு
கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்தி எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் கடிதத்திற்கு பதில் கடிதம் தான் அனுப்பியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் தனது வாசஸ்தலத்தில் இன்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புளெட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் மற்றும் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
அச் சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்திற்கு பதில் அனுப்புவது தொடர்பிலையே இக் கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தினேன்.
அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஊடாக சம்பந்தனுக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளேன். நான் அனுப்பிய கடிதத்திற்கான பதிலின் ஊடாகவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் முடிவெடுக்க முடியும். இரு அமைச்சர்கள் தொடர்பில் எழுத்து மூல உறுதி மொழியினை தந்தால் அதனை ஏற்க தயாராக உள்ளேன். என மேலும் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் மாகாண சபையின் ஆளும் கட்சியின் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் க.சர்வேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய முன்னைய செய்திகள்
முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!
முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்

இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)