மூதூர் பெருவெளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்டோர் விடுதலை! துரோகமும் சதியும்!!
மூதூரின் பெரியவெளி கிராமத்தில்
பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மூன்று சிறுமிகள் பற்றிய வழக்கு இன்று மூதூரின் நீதிமன்றத்தினால் புலனாய்வுப்பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டதுடன் அவ்வழக்கில் இனங்காணப்பட்ட 6 குற்றவாளிகளையும் நீதிமன்றம் உடனடியாக விடுதலைசெய்த கொடுமை இன்று நடந்துள்ளது.
அண்மையில் 7–8– வயதுடைய மூன்று சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தபோது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த குழுவினரே இத்தகைய தகாத செயலில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்விடயம் வழக்குக்கு கொண்டுவரப்பட்ட சமயங்களில் அச்சமூகத்தைச் சேர்ந்த பலர் நீதிமன்ற முன்றலில் திரண்டு பாதிக்கப்பட்டவர்களை மறைமுகமாக அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டுவந்திருந்தனர்.
இதனால் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் எட்டு வழக்கறிஞர்களும் இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜராக எதிர்த்தரப்பில் 12 வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர்.
பாதிக்கப்பட்ட தரப்பில் ஆஜரான சட்டத்தரணி வரதர் மறைமுகமாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோரின் ஒப்புதல் பெறப்பட்டதாக கூறி ஒரு கடிதத்தை கொடுத்து அதில் கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட ஒப்புதல் வழங்கியிருந்தமை பின்னரே தெரியவந்தது.
இதனை சாட்டாக காட்டிய நீதிமன்றம் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்ததுடன் தொடர்ச்சியான விசாரணையை புலனாய்வுப்பிரிவிடம் ஒப்படைத்துள்ளமை தமிழ் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.